அண்மையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு, பொது மருத்துவமனையில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், உள்நோயாளிகளுக்கு ஜபம் செய்து ஏசு உங்களின் நோய்யை போக்குவார். அவரே மெய்யான தெய்வம் என்றும், ஏசுவின் அற்புதத்தை படித்து பாருங்கள் என்று துண்டு பிரசுரம் வழங்கினர். இதேபோல் அடுத்த வார்டில் உள்ள நோயாளிகளுக்கும் தேவ செய்தியை பரப்பி கொண்டே வந்தனர். அதே வார்டில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த ஒரு ஹிந்து அமைப்பை சார்ந்த நபர் தனது உறவினருக்கும், காவல்துறைக்கும் இத்தகவலை கூறினார்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறை, ஹிந்து அமைப்பின் நிர்வாகிகளை சமதானப்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களை மருத்துவமனையிட்டு வெளியேறவும் அறிவுறுத்தினர். ஆனால் அதில் ஒரு நபர் நான் யார் தெரியுமா? என்னை நீங்கள் தடுக்க முடியாது. நான் ஜபம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர். நான் தொட்டல் நோய் குணமாகிறது. என் உடம்பில் ஏசு புகுந்து சொல்கிறார். என்னை யாரும் தடுக்க முடியாது என்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
இதனை அடுத்து மதபிரசங்கம் செய்தவர்களை, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அதில் ஒரு நபர் உமாசங்கர் ஜ.ஏ.எஸ் என்பதை அறிந்து காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து காவல்துறை அவரை கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அரச உத்தியோகத்தரானபடியால் அவருக்குத் தண்டனை பல மடங்கு அதிகமாகவல்லவா இருக்கவேண்டும்,
தவறான முன்மாதிரி !
Serupalea adikanum avana👠👠👠