மராட்டியத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து அரசியலமைப்பின் 356 (2) பிரிவின் கீழ் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டதற்கான அறிவிப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்து வருகிறார். அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய தலைவராக அஜித் பவார் இருந்து வருகிறார். எனவே, சரத் பவாரின் ஒப்புதல் இன்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்பட முடியாது.
அதனால் மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனையில் சரத் பவாரும் இருந்துள்ளார் என்றும் அஜித் பவாரிடம் அதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார் என்றும் கூறப்பட்டுவந்த நிலையில் . தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் பட்டேல், இது எங்கள் கட்சியின் முடிவல்ல. இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.