இந்தியா மனிதாமான, அடிப்படையில் வல்லரசு நாடுகளுக்கும். அண்டை நாடுகளுக்கும் மருந்து பொருட்களை, ஏற்றுமதி செய்து வருகிறது. அண்மையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா, மருந்து பொருட்களை வழங்கியது. இதற்கு அந்நாட்டின் அதிபர் டாக்டர் அஷ்ரப் கானி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்,
எனது நண்பர் பிரதமருக்கு நன்றி!
ஜந்து லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஒரு லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் 75,000 மெட்ரிக் டன் கோதுமை ஆகியவற்றை வழங்கியதற்கு இந்தியாவுக்கு நன்றி.
இந்தியாவிடம் மருந்து கைவசம், அதிகம் இருக்கும் பொழுது. கூடுதல் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், எங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். இக்கட்டான சூழ்நிலையில், நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. என்று ஆப்கான் அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில், டுவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.