சன்யாசிகளை கொடூரமாக அடித்து கொன்ற  கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரி கும்பல் கைது !

சன்யாசிகளை கொடூரமாக அடித்து கொன்ற கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரி கும்பல் கைது !

Share it if you like it

  • மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அருகே பால்கர் என்ற நகரில் 70 வயதான கல்பவ்ரிஷ்கா கிரி மகாராஜ் மற்றும் 35 வயதான சுஷில் கிரி மகாராஜ் ஆகிய இரண்டு ஹிந்து சன்யாசிகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கும்பல்களால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள நிகழ்வானது நெஞ்சை பதற வைத்துள்ளது.
  • இதில் மேலும் அதிர்ச்சி என்னவென்றால் மக்கள் சன்யாசிகளை தாக்கும்போது அவர் காவல் துறை அதிகாரியிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சி அவரின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு உதவ கேட்கிறார். ஆனால் அந்த அதிகாரியோ உன்னை அடித்து கொன்றால் எனக்கு என்ன என்று எண்ணி கைகளை உதறி தள்ளிவிட்டு லாவகமாக அவரிடமிருந்து விலகி சென்றுவிடுகிறார்.

https://twitter.com/DVATW/status/1251913437782966274

  • சன்யாசிகளை கொலை செய்த அந்த மக்கள் கும்பல்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியானது கிறிஸ்துவ மிஷனரிகளின் ஆதிக்க பகுதியாகும். கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆதரிக்கப்பட்ட இந்த பகுதியில் பல மத மாற்றங்கள் பல ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளன.
  • மேலும் அந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மக்கள் பல கேள்வி கணைகளை கேட்ட வண்ணம் உள்ளனர். சன்யாசிகளை மிருகத்தனமாக தாக்கும்போது காவல் துறையினர் அவரை அந்த கும்பல்களிடமிருந்து காப்பாற்றாமல் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் தான் நாட்டை பாதுகாக்க போகின்றார்களா, மக்களை பாதுகாக்க போகின்றார்களா என்று மும்பை போலீசாரை தாக்கி சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • இந்த கொடூரமான செயலை செய்த மர்ம கும்பல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் தூண்டுதல்களின் பேரில் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பவம் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு செய்த கொலை என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
  • இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 சிறுவர்கள் உட்பட 110 கம்யூனிஸ்ட்டை சேர்ந்த கிறிஸ்துவ கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share it if you like it

One thought on “சன்யாசிகளை கொடூரமாக அடித்து கொன்ற கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரி கும்பல் கைது !

Comments are closed.