மற்றவர்களுக்கு வழங்காமல் எனக்கு மட்டும் வழங்குவது நியாயமில்லை – கோவில் பூசாரியின் பெருந்தன்மை !

மற்றவர்களுக்கு வழங்காமல் எனக்கு மட்டும் வழங்குவது நியாயமில்லை – கோவில் பூசாரியின் பெருந்தன்மை !

Share it if you like it

  • சேலம் மாவட்டத்தில், அறநிலைய துறை கட்டுப்பாட்டிலும், கட்டுப்பாட்டில் இல்லாமலும், சுமார் 5,000 கோவில்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கினால் கோவில்கள் திறக்கக்கூடாது என்றும், ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நான்கு நபர்களுக்கு மேல் இல்லாமல் நடைப்பெறலாம் என்றும் அரசு உத்தரவிட்டது.
  • இதனையொட்டி கோவில் பூசாரிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 1,700 கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பூசாரிகள், பணம் தங்களின் வங்கி கணக்கில், இன்று வரும், நாளை வரும் எனக் காத்திருந்து, ஏமாற்றம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
  • பூசாரிகள் சங்கத் தலைவர், வாசு, நான் சேலம், கெங்கவல்லி, மகா மாரியம்மன், செல்லியம்மன் கோவில் பூசாரியாக உள்ளேன். சங்கத்தின் தலைவரான எனக்கு, கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற பூசாரிகளுக்கு கிடைக்காத நிலையில், இந்த நிதியை நான் பெறுவது சரியாக இருக்காது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட தொகையை, அறநிலைய துறைக்கே திருப்பி அனுப்புகிறேன். இந்த நிதியை, வேறு ஒரு பூசாரிக்கு வழங்கி, பயன்படுத்தி கொள்ளட்டும் என்று கூறினார்.

Share it if you like it