சவுதி அரேபிய அரசு, கொரோனா தொற்று தங்கள், நாட்டில் பரவி விட கூடாது. என்பதற்காக, கஃபாவை காலவரையின்றி மூடிவிட்டது. மேலும் யாத்தீரிகர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதே போன்று ஈரான் அரசு வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய மக்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.
ஆனால் இம்ரான் கான் அரசு, முஸ்லிம்களை ஒன்று கூடி தொழுகை புரிய அனுமதித்தது. தொழுகைக்கு பின் வீடு திரும்பியவர்கள் மூலம் கிர்கிஸ்தானில் இருந்து காசா வரை கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது பாகிஸ்தானியர்களால்.
லாகூரில் அமைந்துள்ள ரைவிந்த் பகுதியில் ஆண்டுதோறும் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெறுவது வழக்கம். இதில் உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வர். ஏற்கனவே 2,50,000 மக்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முகாம்களில் முன்பே கூடியிருந்தனர்.
மார்ச் 11 முதல் 15 வரை தப்லீக் மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 12 அன்று, மாநாட்டை கலைக்குமாறு அமைப்பாளர்களிடம் கோரிக்கையினை வைத்தது பாகிஸ்தான் அரசு.
பிப்ரவரி முடிவதற்கு முன்பே, கொரோனா தொற்றில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தப்லீக் மாநாடு நடைபெறுவதற்கு, முன்பே உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்து விட்டது. ஆனால் பாகிஸ்தானின் அலட்சியம் மற்ற முஸ்லீம் நாடுகளுக்கு கொரோனா வேகமாக பரவ அந்நாடு ஒரு கருவியாக அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.