மாணவர்களின் இறப்பை அரசியல் செய்ய காத்திருக்கிறார்கள்.. பிரபல மருத்துவர் சுமந்த் ராமன் பகீர் தகவல்….!

மாணவர்களின் இறப்பை அரசியல் செய்ய காத்திருக்கிறார்கள்.. பிரபல மருத்துவர் சுமந்த் ராமன் பகீர் தகவல்….!

Share it if you like it

தமிழக மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். என்று கூற வேண்டிய இடத்தில் உள்ள அரசியல் கட்சிகள். தங்களின் சுயநலத்திற்காக நீட் தேர்வையும், மாணவர்களின் தவறான முடிவையும், இன்று வரை அரசியலாக்க முயல்வது கடும் கண்டனதிற்குரியது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர், அரசியல் விமர்சகர், என பன்முகத்தன்மை கொண்டவர் திரு. சுமந்த் ராமன் நீட் தேர்வு குறித்து தனது நிலைபாட்டை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அன்புள்ள மாணவர்களே, நீட் என்பது நீங்கள் எளிதாக வெல்லக்கூடிய ஒரு தேர்வு. கடந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 60,000 மாணவர்கள், நீட் தேர்வில் (49%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் இதை தவறாக வழி நடத்தப்பட வேண்டாம். பெற்றோர்கள் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். மற்ற தேர்வை போல இந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளட்டும்.

நீட் தேர்வை தமிழ்நாட்டில் அரசியலாக்குவது மிகவும் துயரகரமானது. தற்கொலை என்பது ஒரு சோகம். அதுவும் ஒரு மாணவரின் தற்கொலை இரட்டிப்பான சோகம். இளைஞர்களின் தூண்டு கோலாக இருக்க வேண்டிய அரசியல்வாதிகள். அவர்களை தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கூற வேண்டும். ஆனால் இறந்தவர்கள் மீது அரசியல் செய்ய காத்திருக்கிறார்கள்..


Share it if you like it