மாதா அமிர்தானந்தமயின் உரையில் நெகிழ்ந்த- பாரதப் பிரதமர் மோடி!

மாதா அமிர்தானந்தமயின் உரையில் நெகிழ்ந்த- பாரதப் பிரதமர் மோடி!

Share it if you like it

இந்திய மக்களால் மாதா, என்று அன்புடன் அழைக்கப்படுபவர், மாதா அமிர்தானந்தமயி. சமூகத்திற்கும், நாட்டு மக்களுக்கும், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளை, செய்வதற்கு மாதா எப்பொழுதும், தயங்கியதே இல்லை.

மத்திய அரசு தொடங்கிய, நமாமி கங்கே திட்டத்திற்கு, கங்கை நதியை ஒட்டியுள்ள கிராமங்களில், கழிப்பறைகள் கட்ட  தமது பங்களிப்பாக, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம், 100 கோடி ரூபாய், வழங்கினார். இவரின் வள்ளல் குணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அண்மையில் மாதா அமிர்தானந்தய்  ’தீபம்’ குறித்து காணொலியில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒவ்வொரு நபரும் ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்தால், ஒளியின் வலிமை பெருகி எல்லாவற்றையும் ஒளிரச் செய்யலாம். அதேபோல், இந்த செயல் நம் ஒவ்வொரு இதயத்திலும் ஒளியை ஒளிரச் செய்ய உதவும். ” என்று கூறியுள்ளார்

அந்த காணொலியை பார்த்த பிறகு, பாரதப் பிரதமர் மோடி மாதா, சிறப்பாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார் என்று தனது டுவிட்டர், பக்கத்தில் கூறியுள்ளார்.


Share it if you like it