திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மற்றும் ஆர்.எஸ். பாரதி அண்மையில் பட்டியல் சமூக மக்களின் மனம் புண்படும் படி மிகவும் இழிவாக பேசினர்.இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மக்கள் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கு வழக்கம் போல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களின் எதிர்ப்பையோ, கண்டனத்தையோ கூறவில்லை என்பது கசப்பான உண்மை.
முதல் வெற்றியும் இரண்டாவது வெற்றியும்
முதல் வெற்றி
ஏற்கனவே நான் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பட்டியல் சமூக ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆர்.எஸ்.பாரதியை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. (1) pic.twitter.com/7hCUmoGZqk
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) May 19, 2020
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மா.வெங்கடேசன் என்பவர் தயாநிதி மற்றும் ஆர்.எஸ். பாரதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீவிர சட்ட போராட்டம் மேற்கொண்டார். அதன் பலனாக அவர்கள் இருவர் மீதும் தேசிய பட்டியல் சமூக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இரண்டாவது வெற்றி
தேசிய பட்டியல் சமூக ஆணையம் தாமாக முன்வந்து தயாநிதி மாறனை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.
திமுகவின் பட்டியல் சமூக விரோதப் போக்கை இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் நாம் அம்பலப்படுத்த வேண்டும். pic.twitter.com/OBHwcEGHcj
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) May 19, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262801541481631745