விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக தமிழகத்தில் சுமார் 5,00,000 பேர் வரை தங்களை விவசாயிகள் என போலி ஆவணங்களை சமர்ப்பித்து இதுவரை நிதி உதவி பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண் துறை அதிகரிக்கும் மட்டுமே தெரிந்த பாஸ்வர்டையும் திருடி பலரையும் இதில் இணைத்தது தெரியவந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை பற்றி, இரு திராவிட கட்சிகளும் வாய் திறக்காமல், இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகிறது. டீ ஷர்ட் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், தற்பொழுது நீட் போராட்டம் என்று தமிழக மக்களை முழுமையாக திசை திருப்பியுள்ளன இவ்விரு கட்சிகளும்.
ஐந்து லட்சம் பேர் மத்திய அரசு வழங்கிய, மொத்த பணத்தையும். அபேஸ் செய்து விட்டு. தமிழ்நாட்டிற்கு மோடி என்ன செய்தார் என்று அப்பாவி மக்களை மத்திய அரசிற்கு எதிராக திருப்பி விடுவது, என ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவும், தமிழக வளங்களை மெல்ல மெல்ல அழித்து வரும் கரையான்களாகவும் திமுக, அதிமுக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.