1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 260 பேர் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் பலத்தகாயம் அடைந்தனர், சிலர் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர் என்பது மாறா வடுவாக உள்ளது.
இந்நிலையில் அதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான தீவிரவாதி முனாஃப் ஹலாரியை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மும்பை விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர், கடந்த மாதம் 175 கோடி மதிப்பிலான போதை பொருளை பாகிஸ்தானில் இருந்து கடத்திய 5 நபர்களை குஜராத் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரனணயில் முனாஃப் பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து உஷார் ஆன காவல்துறையினர் ரெட் கார்னர் நோட்டிஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டு மோட்டார் பைக்கில் வெடிகுண்டுகளை நிரப்பி அதனை வெடிக்க செய்துவிட்டு முனாஃப் பாங்காக் தப்பி ஓடியவன் , அங்கிருந்து மற்றோரு தீவிரவாதி மூலம் பாகிஸ்தானில் போலி பாஸ்போர்ட் பெற்று கென்யா தலைநகர் நைரோபியில் பாகிஸ்தான் குடிமகன் என்ற மாற்று பெயரில் பதுங்கி வாழ்ந்து வந்த அவனை தான் இன்று நம் காவல்துறையினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.