மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான ISIS மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் உலகையே உலுக்கிய நிகழ்வாகும். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள்,வெளிநாட்டினர் மற்றும் எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என நூற்றுக்கணக்காணோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
அந்த பயங்கரவாதியான அஜ்மல் கசாப் பிடிபடாமல் அவர்கள் திட்டப்படி நடந்திருந்தால் அஜ்மல் கசாப் என்ற பெயரை மாற்றி சமீர் சௌத்ரி என்ற பெயரில் இறந்திருப்பான். பெங்களூருவை சேர்ந்த சமீர் சௌத்ரி என்ற பெயரில் போலியான அடையாள அட்டைகளை ISIS மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பானது தயார் செய்திருந்தன. தாக்குதலின்போது அந்த பயங்கரவாதி கையில் சிவப்பு கயிறு கட்டியிருந்தது.பொதுவாக ஹிந்துக்கள் தான் இதுபோல் கையில் சிவப்பு கயிறு கட்டுவார்கள். அஜ்மல் கசாப் சுட்டு கொல்லப்பட்டிருந்தால் அவரது அடையாள அட்டை மற்றும் அவனது கையில் கட்டியிருந்த சிவப்பு கயிறு ஆகியவற்றை வைத்து அவன் ஒரு ஹிந்து என போலீசார் முடிவுக்கு வைத்து இது ஹிந்து பயங்கரவாத தாக்குதலாக முடிவு செய்து விடுவார்கள் என்பதுதான் பாகிஸ்தானின் திட்டம் என்று மும்பை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராகேஷ் மரியா தான் எழுதிய LET ME SAVE IT NOW என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.