தமிழகத்தில் மிகவும் தொன்மையாகவும் போற்றி பாதுகாக்கப்படும் தற்காப்பு கலைகளில் ஒன்றாக சிலம்பாட்டமும் திகழ்கிறது. எதிர்தரப்பு கம்பால் தாக்க வரும் பொழுது அதனை திறமையுடன் தடுத்து, தம்மை தற்காத்துக்கொள்ளும் வகையில் லாவகமாக செயல்படும் விளையாட்டுகளில் இது சிறந்ததாக திகழ்கிறது. இதில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்ப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (23) என்னும் இளைஞர் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிலம்பம் கற்றுதர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும். உலக சாதனையை கருத்தில் கொண்டு நிமிடத்திற்கு 16 சுற்று வீதம் என தொடர்ந்து 3 மணி நேரம் 2,080 முறை கம்பை சுழற்றி சாதனை படைத்துள்ளார்.
இதனை அடுத்து அவரின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு உலக சாதனைக்கான விருதை வழங்கி மோகன்ராஜை கெளரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.