கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதன்முறையாக சென்றார். அப்போது அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது ஜாயித் அவர்களை சந்தித்து அமீரகத்தில் வசிக்கும் இந்திய ஹிந்து மக்களுக்காக ஹிந்து ஆலயம் கட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபி ஷேக் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் இடத்தை அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தார் அபுதாபி இளவரசர்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும்,நிர்வாகம் செய்வதற்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் அமைப்பிற்கு அனுமதி வழக்கப்பட்டது.இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவை காணொளி மூலம் திறந்து வைத்தார் மோடி.
அபுதாபியில் கட்டப்படும் இந்த ஆலயமானது இந்திய பாரம்பரிய முறையில் கட்டப்பட உள்ளது.எனவே இதற்காக இந்தியாவில் இருந்து கைதேர்ந்த 3000 சிற்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த கோவிலை பற்றி அறிந்துகொள்ளும் விதத்தில் பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.
மேலும் இதே தோற்றத்தில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரத்திலும் ஒரு ஹிந்து கோவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.