சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு செய்த தவறினால். இன்று உலகமே ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணிபுரியும் காஷ்மீர் ‘பத்திரிகையாளர்’ சாமியா லத்தீப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது வெறுக்கத்தக்க ட்வீட் நாடு முழுவதும் வைரலான பிறகு, லத்தீஃப் தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக செயலிழக்க வைத்து விட்டுட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை மருத்துவர்கள் காக்க போராடி வரும் நிலையில். துளியும் இறக்கம் இன்றி மோடி, அமித்ஷாவிற்கு கொரோனா பரவ வேண்டும் என்று நினைக்கும். இவரின் செயல் வெட்ககேடானது. மட்டுமின்று இவரின் வன்மம் நிறைந்த உள்ளம் என்னவென்பதை, நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார் என்பதை, அறிந்து கொள்ள முடிகிறது.
அதே போன்று முன்னாள் என்டிடிவி பத்திரிகையாளர் சுனேத்ரா சவுத்ரி 2009 ஆண்டு நரேந்திர மோடிக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது எனக்கு தெரியாது ஆனால் இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர்கள் மீது. தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கும் விதம், மிகவும் கீழ்த்தரமானது. இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள், கருத்து கூறிவருகின்றனர்.