Share it if you like it
துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தார். அவரது பேச்சு திராவிட கழக ஆதரவாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதனை சோ துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று பாஜக தலைவர் சுப்ரமண்ய சாமி அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Share it if you like it