Share it if you like it
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார். பின்னர் 19 வது இந்தியா, ரஷிய ராணுவ ஒத்துழைப்பு கருத்தரங்கில் பங்கேற்கிறார். கருத்தரங்கில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் இராணுவ தொழில்நுட்பங்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்க்கு பின்னர் உஸ்கிபெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்க்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
Share it if you like it