கோடி கணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமாக இருக்க கூடியவர் ராமபிரான். உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, என்று அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து. வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செய்ய உள்ளது.
பாரதப் பிரதமர் மோடி பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று அண்மையில் அசாவுதீன் ஓவைசி தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். ராமர் கோவில் கட்டுவதால் கொரோனா போய் விடுமா என்று காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.சி.பி தலைவர் சரத் பவார் தனது வன்மம் நிறைந்த எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும் தற்பொழுதைய சிவகங்கை எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ராமர் ஆலயத்திற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருப்பது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ram Mandir Bhoomi Pujan Muhurta- Its astrological meaning ? The choice of time baffles me, Wednesday 12 to 1.30 pm is Rahu Kaalam. No one starts anything auspicious during this period. I stick to my stated position, we don’t need any new place of worship. https://t.co/WyUplLkPsf
— Karti P Chidambaram (@KartiPC) July 30, 2020