Share it if you like it
வன்முறை என்றுமே பிரச்சனைக்கு தீர்வாகாது என துணை குடியசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனால் பல இடங்களில் சாமானிய மக்களும், வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, “நாட்டின் நலனுக்கு எதிராக எத்தகைய தடைகளும் இருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சியை நோக்கியே நமது பணிகள் இருக்கவேண்டும். சிலர் இங்கு நாட்டின் பொதுப்போக்குவரத்தை தீயிட்டு அழிக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது யார்? உன்னத நோக்கிற்காக மட்டுமே போராடவேண்டும், அதுவும் அமைதியான முறையில் இருக்கவேண்டும். அதனால் என்றுமே வன்முறை என்றுமே பிரச்சனைக்கு தீர்வாகாது” என்றார்.
Share it if you like it