இந்திய மக்கள் அனைவரும், ஒன்றுமையாக பாரதப் பிரதமர் கேட்டு, கொண்டதற்கு இணங்க. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், சேவையை பாராட்டி கரவொலி எழுப்பி, வாழ்த்துக்களை கூறினர். கைதட்டினால் கொரோனா போகுமா என்று, அவர்களின் சேவையை கொச்சைப்படுத்தினர்.
நாட்டிற்கு எதிராக, எவ்வளவு விரோதமாக பேச முடியுமோ, எழுத முடியுமோ, போலி செய்திகளை, மக்களிடம் பரப்ப முடியுமோ, அனைத்தையும் பிரிவினைவாதிகள், ஊடகங்கள், சில்லறை போராளிகள், அரசியல்வாதிகள், இன்று வரை தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று தீபம் ஏற்றி ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து தங்களின் ஒற்றுமையையும். நாங்கள் என்றும் சகோதரர்கள், எங்களுக்குள் வேற்றுமை, இல்லை என்று பறைச்சாற்றும், விதமாக இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டனர்.
இது ஒட்டு மொத்த, உலக நாடுகளின், கவனத்தையும் ஈர்த்தது. இதனை கண்டு பல போராளிகள், உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, தனிமையில் கதறி இருப்பர்.
எனவே அவர்கள், மெடிக்கல் ஷாப் சென்று, ஜெலூசில் வாங்கி பருகி இருப்பார்கள், என்று தங்களுக்கு, பிடித்த போராளிகளிடம், உடல் நலன் குறித்து விசாரித்து வருகின்றனர் குசும்பு பிடித்த டுவிட்டர் வாசிகள்.