ராமர் கோவில் தொடர்பாக நீண்ட ஆண்டுகளாக இரு சமுதாய மக்களிடையே நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள், உள் நாட்டு சூழ்ச்சிகள் மற்றும் சதிகள், அனைத்திற்கும் பாரதப் பிரதமர் மோடி நீதிமன்றம் மூலம் சரியான தீர்வினை கண்டு இன்று இரு சமூக மக்களிடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் தினம், தினம், சிறுபான்மை எதிராக நிகழும், கொடுமைகளை கண்டு நேர்மையான முறையில் தனது கருத்துக்களை துணிச்சலாக டுவிட்டரில் பதிவிட கூடியவர். அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அயோத்தி நில அகழ்வாராய்ச்சியில் பண்டைய கோவிலின் மிச்சங்கள் மற்றும் இந்துக்கள் உரிமை கோரும் வகையிலான சிலைகள் இருப்பது முறையாக கண்டுபிடிக்கப்பட்ள்ளது. தற்பொழுது வரலாறு சரி செய்யப்பட்டது. உண்மை நிலவுகிறது. என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.