வன்முறையை தூண்டும் விதமாகவும், ஹிந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் தொடர்ந்து காணொலியாக வெளியிட்டு வந்த கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கையில்லை. தனது உணர்வினை வெளிப்படுத்திய ஓவியர் வர்மா நேற்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டது ஏன்? என்று தமிழக மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறுகூறியுள்ளார்.
முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்து விரோத இணையதள சேனல் என்றால் வழக்குப் பதிவு இந்து உணர்வாளர் கார்ட்டூனிஸ்ட் வர்மா என்றால் கைதா? ஏன் இந்த பாரபட்சம். இந்துக்கள் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.