வழிபாட்டில் உள்ள ஆலயத்தை…! விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ மிஷநரிகள்..! தெய்வ விக்ரகங்கள் அவமதிப்பு…! கண்டு கொள்ளுமா அரசு?

வழிபாட்டில் உள்ள ஆலயத்தை…! விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ மிஷநரிகள்..! தெய்வ விக்ரகங்கள் அவமதிப்பு…! கண்டு கொள்ளுமா அரசு?

Share it if you like it

எங்கெல்லாம் கிறிஸ்தவ மிஷநரிகளின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் ஹிந்துக்களின் நிலை படுமோசமாகி கொண்டே போகும் என்பது நிதர்சனமான உண்மை. திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவரில் என்பதில் ஆரம்பித்து ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், அனைத்தையும் திருடி. கிறிஸ்தவம் என்கின்ற ஒற்றை புள்ளியில் அனைத்து மக்களையும் கொண்டு வந்து சேர்பதே அவர்களின் முக்கிய நோக்கம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

பிரிவினையை தூண்டுதல், சினிமா, திரைப்படம், சீரியல், போன்றவற்றின் மூலம் ஹிந்து கலாச்சாரங்களை இழிவுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்படுவது என்று மிஷநரிகளின் அட்டூழியம் தொடர் கதையாக இருந்து வருகிறது. (அண்மையில் காட் மேன்) லாயோலா கல்லூரியில் ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடத்திய கண்காட்சியை ஹிந்துக்கள் மனதில் இன்று வரை ரணமாக உள்ளது.

மயிலாடுதுறை அருகில் அடியமங்கலம் என்ற ஊரில் சிதிலமடைந்த ஒர் ஐயனார் கோவில் உள்ளது. வெகுகாலமாக அக்கோவிலில் பூஜை நடை பெற்று வருகிறது. அரசு ஆவணத்திலேயே அது கோவில் இடம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. கோவில் இடம் என்றே தெரிந்து, அந்த நிலத்தை கிருஸ்தவ மிஷனரிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி உள்ளனர்.

தற்பொழுது அக்கோவிலில் உள்ள தெய்வ விக்ரகங்களை அப்புறப்படுத்தும் கீழ்த்தரமான முயற்சியில் கிறிஸ்தவ மிஷநரிகள் இறங்கியுள்ளனர். ஏற்கனவே சென்னை பார்த்த சாரதி கோவிலின் சொத்தை ஒ.எல்.எக்ஸில் காசிம் என்னும் இஸ்லாமியர் ஒருவர் விற்க முயற்சி மேற்கொண்ட பிரச்சனை அடங்குவதற்குள்.

மீண்டும் அதே போன்று ஒரு பிரச்சனை எழுந்து இருப்பது ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. 900 வருடங்களுக்கு முந்தைய பழம் பெரும் கோவில் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it