அண்மையில் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இவ்வாறு கூறியிருந்தார்.
சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை அதே நேரத்தில் ‘இது 1962 அல்ல’ என்பதை சீனா மறந்து விட கூடாது. இந்தியாவின் உரிமைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க முடியாது. எங்கள் பகுதிக்குள் சாலைகள் அமைப்பதற்கு சீனர்களிடம் ஏன்? நாங்கள் அனுமதி பெற வேண்டும் என்று அமரீந்தர் சிங் கேள்வி? எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சீனாவிற்கு எதிராக தனது கண்டன அறிக்கையை இவ்வாறு கூறியுள்ளார்.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் அண்டை நாடு பதிலளிக்கவில்லை என்றால். சீனாவுடனான எல்லை வரையறை குறித்து மிக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்திய ராணுவத்தையும், மத்திய அரசின் நிலைபாட்டையும் கேலி செய்து வரும் நிலையில். முன்னாள் ராணுவ கேப்டனும் தற்பொழுதைய பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் கருத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.