ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை, எளியவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, இன்னும் சில சமூக தொண்டு நிறுவனங்கள். மக்களுக்கு கிருமி நாசினி, முக கவசம், உணவுகள், மருந்து பொருட்கள், ஏழைகள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
ஆனால் எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்யாமல் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மக்களுக்கு திமுக மட்டுமே உதவுவதாக பிரச்சாரம் செய்வதற்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் திமுக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ondrinaivomVaaஉதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். இலட்சக்கணக்கானோர் சிரமப்படுவதையே இது காட்டுகிறது. அவர்களுக்கு திமுக அரணாக நிற்கும். பேரிடரிலும் களத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்!
இதற்கு நெட்டிசன்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தனர்? 5 நாட்கள் = 5 x 24 =120 மணிநேரம் = 120 x 60 = 7200 நிமிடங்கள். 1 நிமிடத்தில் ஒருவரிடம் பேசினாலும் 5 நாட்களில் 7200 பேரிடம் மட்டுமே பேசமுடியும். அதெப்படி 2 லட்சம் பேர்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.