அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) சார்பில் நாடு முழுவதும் கல்லூரி மாணவிகளுக்கு வாரந்தோறும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘மிஷன் சாக்க்ஷி’ என்ற பெயரில் மாணவிகள் தங்களை எவ்வாறு சமூக விரோதிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வது என பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இதன் அடிப்படையில் பயிற்சி பெறும் மாணவிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றாக இனணந்து மெகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இது ‘வீர சக்தி சங்கமம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் 800 மாணவிகள் பங்கு பெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய தலைவர் டாக்டர். சுப்பையா சண்முகம் மற்றும் கல்லூரியின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.