வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக மீட்ட மோடி அரசுக்கு சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள் !

வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக மீட்ட மோடி அரசுக்கு சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள் !

Share it if you like it

  • கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தனது சொந்த குடிமக்களைக் கொண்டுவருவதற்கான அதன் முயற்சிகளும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளன. இத்தாலியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண்ணின் தந்தை தனது உணர்வுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த காலங்களில் தான் மோடி அரசாங்கத்தை விமர்சித்ததாகவும், ஆனால் இப்போது மோடி அரசாங்கம் ஒரு பெற்றோரை போன்று இந்தியர்களைக் கவனித்து வருவதை உணர்ந்தார்.
  • டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளர் ரோஹன் துவா இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு பெண்ணின் தந்தையின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். இந்த கடிதத்தில், தானே பகுதியில் குடியிருக்கும் சுஜய் கதம் என்பவர் இந்திய தூதரகம், மற்றும் குறிப்பாக நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரது மகள் உயர் படிப்புக்காக மிலனுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது கொரோனாவால் நிலைமை மோசமடைந்தபோது, ​​இந்தியாவுக்குத் திரும்பும்படி அவரின் தந்தை அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருடைய கல்லூரி மற்றும் உணவகங்கள் மூடப்பட்டு, சாப்பிடுவதற்கு உணவு இன்றியும் தவித்துள்ள அவர் இந்தியாவுக்கு திரும்ப முயன்றுள்ளார்.

  • இத்தாலிய அதிகாரிகளால் இந்திய தூதரகத்திலிருந்து ஒரு சான்றிதழை வழங்குமாறு அவரது மகளுக்கு கேட்கப்பட்டது. அவரது தந்தை இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மிலனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மூடப்பட்டதால் சான்றிதழை பெற அவரால் முடியவில்லை. மேலும் அவர் சில தூதரக ஊழியர்களின் மின்னஞ்சல் ஐடிகளை அவர்கள் வலைத்தளத்திலிருந்து சேகரித்து அந்த மின்னஞ்சல் ஐடிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அடுத்தநாள் மார்ச் 12 அன்று காலை 8.30 மணிக்கு அவரது தனது மகளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெறுகிறார். அவர் தூதரக ஊழியர்களால் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அடுத்த நாளிலேயே அவர் மீண்டும் இந்தியாவுக்கு விமானத்தில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
  • மார்ச் 15 ஆம் தேதி தனது மகள் இந்தியா வந்துவிட்டதாகவும், உணவு, தங்குமிடம் மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாகவும், பராமரிப்பு வசதிகள் சிறப்பாகவும் இருக்கும் ஐடிபிபி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகளை பாதுகாப்பாக அழைத்து வந்து அணைத்து வசதிகளையும் செய்ததற்காக இந்திய தூதரகம் மற்றும் குறிப்பாக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
  • இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் தற்போது சர்வதேச அளவிலும் பாராட்டப்படுகின்றன. அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு காணொளியில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஒருவர் டெல்லியில் இருந்து 70 கி.மீ தூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட கட்டிட  வசதியின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அதில் கட்டிடம் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுவதாகவும், 24 மணி நேரமும் உயர் மட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அந்த காணொளி காட்டுகிறது.மேலும் அரசாங்கம் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அனைவருக்கும் தனி அறைகள் கிடைத்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தனி அறைகள், புதிய தாள்கள், துண்டுகள், குடிநீர், நல்ல தரமான உணவு, செருப்புகள் மற்றும் பல வசதிகள் வழங்கப்படும் ஒரு சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் வசதியை அந்த காணொளி காட்டுகிறது.


Share it if you like it