மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தீவிரமான போராட்டங்களை நடத்திய போராட்டக்காரர்கள் பலர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இது குறித்து ஷாகீன் பாக் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஷாசாத் அலி கூறுகையில் “ பாஜக இஸ்லாமியர்களுடைய எதிரி என எங்கள் சமூகத்தினர் நினைத்திருப்து தவறு எனத் தெரிவிக்கவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். பல ஆண்டுகளாக பாஜக முஸ்லிம்களுக்கு எதிரி என மற்ற கட்சிகள் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தன, பாஜக எதிரியா அல்லது நண்பரா எனத் தெரிந்து கொள்ளவே பாஜக பக்கம் செல்ல நினைத்தேன். ஆனால் என்னிடம் பாஜக தலைவர்கள் நல்ல மரியாதையுடனும் வேறுபாடு பார்க்காமலும் பழகினர். சிஏஏ சட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பாஜக தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேசுவேன்” எனத் தெரிவித்தார்.

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை என்ன செய்தது பாஜக…?
Share it if you like it
Share it if you like it