உண்மைக்கு மாறாக, தமிழக மக்களிடம் தவறான தகவல்களை அரசியல்வாதிகள், ஊடகங்கள் மிக தீவிரமாகவும். ஹிந்துக்களின் மனம் புண்படும் படியும் வன்மம் நிறைந்த செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து கூறி கொண்டே வருகிறது. ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் சீரியல், சினிமா, அண்மையில் ஜோதிகா என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அண்மையில் நீயுஸ் 7 சேனல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று புட்டபர்த்தி சாய்பா கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு என்று கூறியுள்ளது.
புட்டபர்த்தி கோயில் மூடப்பட்டு 45 நாட்களுக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது போய் புட்டபர்த்தி கோயிலுக்கு போய்ட்டு வந்தவருக்கு கொரானா என்று செய்தி வெளியிட்டு இருப்பது ஹிந்துக்களின் மீது அந்த ஊடகத்திற்கு எவ்வளவு வன்மம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அண்மையில் மீனாட்சி அம்மன் கோயில் இப்பொழுது புட்டபர்த்தி. ஹிந்துக்களின் மீது தொடரும் மாஃபியா ஊடகங்களின் தாக்குதல் இது என்று நெட்டிசன்கள் நீயூஸ் 7 சேனலை ஆர். எஸ் பாரதி பாணியில் வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை மண்டலம் இல்லாத மாநிலமானது தமிழகம்!https://t.co/5wMBD3FLqB | #Corona | #COVID19 | #Krishnagiri pic.twitter.com/hTTCVGkEHo
— News7 Tamil (@news7tamil) May 2, 2020