ஹிந்துக்கள் என்றால் சட்டங்கள், தண்டனைகள், உடனே பாய்கிறதே ஏன்?- தருண் விஜய் கேள்வி!

ஹிந்துக்கள் என்றால் சட்டங்கள், தண்டனைகள், உடனே பாய்கிறதே ஏன்?- தருண் விஜய் கேள்வி!

Share it if you like it

அண்மையில் சென்னை டி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரியின் உரிமையாளர் வாட்ஸ் அப்பில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார். இங்கு உள்ள அனைத்து திண் பண்டங்களும் “சமணர்களால் செய்யப்பட்டவை. முஸ்லிம் ஊழியர்கள் பணியில் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையான நிலையில் பேக்கரியின் உரிமையாளர் உடனே கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.

இப்பொழுது  இறைச்சி பொருட்களில், ஹலால் என்று சான்றளிக்கப்பட்டவை என்ற பெயரில் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. உயிர்களை பலியிடுவதில் தொடங்கி அதனை பேக்கிங் செய்யும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லீம் ஊழியர்கள் மட்டுமே முழு செயல்முறையிலும் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறார்கள். முஸ்லிம் அல்லாதவர் இந்த செயலில் ஈடுபட்டிருந்தால் அதன் தயாரிப்பு ஹராம் என்று கூறப்படுகிறதே ஏன்? இந்த முரண்பாடு இதற்கு யாரும் பொங்கவில்லையே என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் கேரளாவில் இரண்டு இளைஞர்கள் உங்கள் பக்தி பாடல்களை நிறுத்துங்கள். இது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்று ஸ்ரீ கிருஷ்ணானந்த் ஆசிரமத்தை ஒலி பெருக்கி மூலம் மிரட்டினர். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தவர் தரூண் விஜய். மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டார்களா, என்பது மில்லியன் டாலர் கேள்வி?

இந்நிலையில் பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ் மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவருமான தரூண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

எந்த ஒரு அரசாங்கமும், எந்த ஒரு மட்டத்தில் இருந்தாலும், ஹிந்துக்களுக்கு மட்டுமே உள்ள சட்டங்கள் மற்றும் தண்டனைகளை கவனத்தில் கொள்கிறது. ஆனால் இந்த விளம்பரத்தில் ஹிந்து, முஸ்லீம்களுக்கு இடம் இல்லை என்பது போல் உள்ளதே என்று கூறியுள்ளார். முஸ்லிம்’ பேக்கரிகள் தண்டிக்கப்படுவதில்லை. நாங்கள் பார்த்தோம், அமைதியாக இருந்தோம், ஆனால் இது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it