Share it if you like it
- காங்கிரசின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு பக்கம் ஹிந்துக்கள் வணங்கக்கூடிய சீதா தேவி அம்மையார் படமும் மற்றொரு பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி படத்தையும் பகிர்ந்து அந்த புகைப்படத்தின்மேல் திரேத யுகத்தில் பிறந்த சீதா தேவிக்கும், கலியுகத்தில் பிறந்த எங்கள் அன்னை சோனியா காந்திக்கும் ஒற்றுமை உள்ளது. சீதா தேவி நேபாளத்தில் பிறந்தவர் எங்கள் அன்னை இத்தாலியில் பிறந்தவர் சீதா தேவி லங்கையில் அரக்கர்களால் அவதூறாக பேசப்பட்டார். கலியுக காலத்தில் எங்கள் அன்னையை அரக்கர்கள் அவதூறு பேசுகிறார்கள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என பலரும் லைக் செய்து ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த பதிவு வைரலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
अभी भी देश में राक्षस जैसी सोच ज़िंदा है,
सीता माँ हम शर्मिंदा है. pic.twitter.com/RNfIEaFMny— With Congress (@WithCongress) April 26, 2020
- சமீபத்தில் மஹாராஷ்டிராவில் இரண்டு ஹிந்து சன்யாசிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதற்கு வாய் திறந்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத சோனியா காந்தியை ஹிந்து தெய்வமான சீதா தேவியுடன் ஒப்பீடு செய்வதை வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும்.
- அதற்குமுன் டெல்லி கலவரத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட ஹிந்து உளவுத்துறை அதிகாரியின் கொலைக்கு ஒரு கண்டனம் வேண்டாம் இறந்தவரின் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூட சொல்லாத சோனியா காந்தியை ஹிந்து தேவியுடன் ஒப்பிடுவது நியாயமானதா?
- இதுபோல் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து சோனியா காந்தி கண்டனம் தெரிவிக்கமாட்டார். ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு ஹிந்துக்களிடம் ஓட்டு வாங்க பல்லை இழித்துகொண்டு வந்துவிடுவார்கள்.
- சில நாட்களுக்கு முன் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர்.
- ஹிந்துக்களின் தெய்வமான சீதாதேவியை அடிதடி மற்றும் ஊழல் செய்து கட்சிகளை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவருடன் ஒப்பீடு செய்வது அநாகரிமான செயலாகும். இதற்கு சோனியா காந்தி மன்னிப்பு தெரிவித்து அந்த பதிவை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share it if you like it