ஹிந்துத்துவா என்பது ஒரு புகழ்பெற்ற கலாச்சாரம் – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி !

ஹிந்துத்துவா என்பது ஒரு புகழ்பெற்ற கலாச்சாரம் – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி !

Share it if you like it

 

பிரக்ஞ்யா பிரவாக் [தேசிய சிந்தனை கழகம்] தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜே.நந்தகுமார் எழுதிய “மாறிவரும் காலத்திற்கு ஏற்ற ஹிந்துத்துவா, Hindutva for the Changing Times’ என்ற பெயரில் எழுதிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி இன்று கேரள மாநிலத்தின் கோட்டயம் பிரஸ் கிளப்பில் நடந்தது.

இந்த விழாவில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி K.T.தாமஸ் கலந்துக்கொண்டு வெளியிடப்படும் புத்தகத்தின் முதல் நகலை எம்.ஜி. பல்கலை கழகத்தின் துணைவேந்தர் சிரியாக் தாமஸ்க்கு வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், ஹிந்துத்துவா என்பது ஒரு புகழ்பெற்ற கலாச்சாரம் என்று கூறினார்.

அதன்பிறகு புத்தகம் எழுதிய ஜே.நந்தகுமார் அவர்கள் “ஹிந்துத்துவா என்பது காலத்தால் அழியாது என்பதை நிரூபித்துள்ளது” என்று பேசினார்.

பாரதீய விச்சார் கேந்திரம் துணைத் தலைவர் டாக்டர் சி. ஐசாக் புத்தகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் பி. மாதவன் பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.


Share it if you like it