ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக இஜாஸ் பாஷா, ஹுசைன் ஷெரிப், அப்துல் ரஹமான், லியாகத் அலி, இம்ரான் கான், ஹனீப் கான்,பச்சையப்பன், ராஜேஷ் ஆகியோர் சிறையில் உள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இவர்கள் மீதான வழக்கில் தொடர்புடைய 25 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு (NIA) அதிகாரிகள் பிப்ரவரி 24 அன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் காஞ்சிபுரம், தூத்துக்குடி, கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் 16 சிம் கார்டுகள், முக்கிய ஆவணங்கள், ஜிஹாதை ஆதரிக்கும் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான செல்போன்கள், லாப்டாப், CD, சதி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹிந்து தலைவர்களை கொல்லவும், சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கவும், மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபடவும் சதி திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் இதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளையும் வரவழைத்துள்ளதாக NIA செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.