Share it if you like it
- கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிக்ளோரோக்வின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நட்பு நாடுகளுக்கு, ‘ஹைட்ராக்சிக்ளோரோகுவின்’ மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
- இந்நிலையில், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாக்கும், பிரதமர் மோடிக்கும் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நன்றி தெரிவித்து இது நட்பு மற்றும் ஒற்றுமையின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.
- மேலும் சமீபத்தில் இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிக்ளோரோகுவின் மருந்தை பெற்ற சுவிட்சர்லாந்து, அந்நாட்டில் உள்ள பிரபலமான ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை இந்தியாவின் மூவர்ண கொடியால் அலங்கரித்து நன்றி சொல்லியது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it
நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
நாம் நல்லோர்.