100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் : ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு !

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் : ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு !

Share it if you like it

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றன. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.294ஆக இருந்த ஊதியம், ரூ.319ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களுக்கும் மாநில வாரியாக ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *