சென்னையில் ஆயிரம் அடிக்கு மேல் வீடு கட்டும் அனுமதி கட்டணம் நூறு சதம் உயர்வு

சென்னையில் ஆயிரம் அடிக்கு மேல் வீடு கட்டும் அனுமதி கட்டணம் நூறு சதம் உயர்வு

Share it if you like it

சென்னை மாநகரில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை நூறு சதம் முழுமையாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏற்கனவே இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் பன் மடங்கு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு வீட்டு வரி உயர்வு என்று பல்வேறு சிரமங்களை மாநகர மக்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் வீடு கட்டும் அனுமதிக்கு மட்டுமே 100 சதம் கட்டண உயர்வு அறிவிப்பால் சொந்த வீடு கனவில் இருக்கும் சென்னை மாநகர மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.

குறிப்பாக ரியல் எஸ்டேட் என்பது அரசியல்வாதிகள் அவர்களின் ஆதரவாளர்கள் பெரும் பணம் கொழிப்பதற்காக கடுமையான உடல் உழைப்பின்றி அதிகார தோரணையில் செய்யும் தொழிலாக மாறியது. பெரும்பாலான கருப்பு படங்களை வெள்ளை ஆக்குவதில் வட்டி தொழிலுக்கு அடுத்ததாக ரியல் எஸ்டேட் தொழிலை பார்க்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த கால் நூற்றாண்டுகளில் ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி கண்டது .இதில் ஏற்கனவே தமிழகத்தில் மற்ற இடங்களை விடவும் சென்னை மாநகரில் எல்லாவற்றிலும் விலைவாசி கடும் உயர்வாக இருக்கும். குறிப்பாக சென்னையிலிருந்து இரண்டு மணி நேர தொலைவு பிரயாணத்தில் இருக்கும் காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு குடும்பம் வாழ்வதற்கு தேவையான செலவு விட அதே குடும்பம் சென்னையில் வாழும் போது செலவுகள் இரு மடங்காகும் என்ற அளவில் தான் சென்னையில் தனிமனித வாழ்வில் செலவின உச்சம் இருந்து வருகிறது.

ஒரு சாமானிய மனிதன் சென்னையில் கௌரவமாக வாழ வேண்டும் எனில் அது பெரும் சவாலாக இருப்பது குடியிருப்பு செலவு மட்டுமே. குறிப்பாக வீடு தொழில் வியாபார ஸ்தலங்களுக்கான முன்பணம் மற்றும் வாடகை என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் அச்சுறுத்தும் அளவில் வளர்ந்து நின்றது. கடந்த கொரோனா காலத்தில் கொரோனா முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு போனவர்கள் பலரும் இந்த முன் பணம் வாடகை உயர்வு காரணமாக பலரும் சென்னைக்கு திரும்பி வந்து தொழில் தொடங்காமல் அந்தந்த ஊர்களில் அப்படியே செட்டில் ஆகிவிட்ட நிலையும் இருந்தது. சென்னையில் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். சொந்த உழைப்பைக் கொண்டு தினக்கூலியாகவோ வார கூலியாகவோ மாத ஊதியமாகவோ வருவாய் ஈட்டுவது எளிது .ஆனால் அந்த வருமானத்தைக் கொண்டு தனது உணவு உடை இருப்பிடம் அத்தியாவசிய செலவுகள் அத்தனையும் தக்க வைத்து சென்னையில் வாழ்வது என்பது மிகவும் சிரமமான சவாலாக மாறிவிட்டது.

இதில் எந்த நிலையும் எதிர்கொள்ள தயாரான பொருளாதார பலத்தோடு இருக்கும் மேல்தட்டு மக்களுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. எதைப் பற்றியும் கவலையில்லை அன்றைக்கு உழைத்தால் தினமும் கூலி வந்தால் சாப்பாடு இல்லையேல் பட்டினி இன்று இருக்கும் அடித்தட்டு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஊதிய வரம்பு அல்லது தொழில் மூலம் வருவாய் வரம்பு என்ற நிலையில் வாழும் நடுத்தர குடும்பங்களும் உயர் நடுத்தர குடும்பங்களும் தான் இந்த ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். அவர்களுக்கெல்லாம் இருக்கும் சொந்த வீடு என்ற கனவு இந்த விலைவாசி உயர்வால் நிலம் மனை உயர்வால் ஏற்கனவே பெரும் சுமையாக இருக்கிறது.

பெருகிவரும் நிலமனை விலை உயர்வு ரியல் எஸ்டேட் கபளீகரத்தால் கடந்த தலைமுறைகளில் எல்லாம் தனி வீடுகளில் இருந்தவர்கள் இப்போது அடுக்ககங்களுக்கு மாறிவிட்டார்கள். அடுக்ககங்களில் இருந்தவர்கள் வாடகை வீடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள். வாடகை வீடுகளில் இருந்தவர்கள் அதில் தக்க வைக்கவும் முடியாமல் அதிலிருந்து வெளியேறவும் முடியாமல் தத்தளித்து வருகிறார்கள் .இந்த நிலையில் தான் சென்னை மாநகரில் எவ்வளவு வருமானம் வந்தாலும் தனி வீடு சொந்த வீடு அதற்கான முதலீடு என்பதை கடந்து இருப்பதை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை யோசிக்க முடியும் என்ற நிலையில் தான் மாநகர மக்களின் வாழ்க்கைச் சூழல் இருந்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி வந்ததிலிருந்தே ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் திமுகவின் உள்ளாட்சி நிர்வாகிகள் கட்சிக்காரர்கள் என்று பல்வேறு சுரண்டல்களுக்கு இடையே தான் மாநகர மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சொந்தமாக வர்த்தக கட்டிடங்கள் வைத்து வாடகை வாங்குபவர்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பவர்கள் படும் பாடு சொல்லி மாறாது. இவ்வளவு இடையூறுகளுக்கு இடையே சிறுக சிறுக சேர்த்து தங்களுக்கு என்று ஒரு சிறு வீட்டை வாங்கிக் கொண்டு அதை நிம்மதியாக காலம் தள்ளிவிடலாம் என்று இருக்கும் மக்களிடம் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கும் கட்டினமே 100% உயர்வு என்று அராஜகத்தை காட்டுகிறது திமுக அரசு. அனுமதி கட்டணமே நூறு சதமாக உயரும் போது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழக மாநகர மக்கள் அனுமதி வேண்டி செலவழிக்க வேண்டிய அதிகார கொள்ளைகள் எல்லாம் இன்னும் பன்மடங்கு கூடும். இதன் காரணமாக சொந்த வீடு என்னும் போது எப்படி பத்திரப்பதிவு செலவுகள் ஒரு பக்கம் மிரட்டுமோ ? அதேபோல உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தர வேண்டிய வரி இனங்களும் கட்டண உயர்வுகளும் கூட மறுபக்கம் மாநகர மக்களை மிரட்டத் தொடங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. அதிலும் மாநகராட்சி தர அந்தஸ்து உயர்த்தப்பட்ட இடங்களில் அதற்கான கூடுதல் மதிப்பீடு என்று தனியாக ஒரு வரி உயர்வும் அமலுக்கு வந்தது .ஏற்கனவே தாறுமாறாக உயர்ந்து வந்த விலைவாசி அதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்று வீடு கட்டும் செலவுகளும் பராமரிப்பு செலவுகளும் மாநகர மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்நிலையில் தொடர்ச்சியாக வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு என்று மக்களை வாட்டி வதைத்தது போதாது என்று தற்போது மாநகராட்சி சென்னையில் வீடு கட்ட அனுமதி வாங்குவதற்கு ஏற்கனவே இருந்த கட்டணத்தை 100% அப்படியே உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் சிரமத்திற்கு இடையே சென்னையில் ஒரு வீடு என்பதற்காக நித்தமும் போராடிவரும் மாநகர மக்கள் ஏற்கனவே ரியல் எஸ்டேட் கட்டுமான தொழில் விலை உயர்வு காரணமாக அவதிப்படுவது போதாது என்று மாநகராட்சியும் மாநில அரசும் கூட தொடர்ச்சியான வரி உயர்வு அனுமதி கட்டண உயர்வு என்று அவர்களின் சொந்த வீட்டு கனவில் மண்ணள்ளி போடுகிறது.

உணவுப் பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை வாரத்திற்கு பலமுறை உயர்ந்து வரும் நிலையில் வீட்டு செலவுகளை சமாளிப்பது பெரும் பாடாக இருக்கும் நடுத்தர மக்கள் இது போன்ற கட்டண உயர்வுகளையும் வரி உயர்வுகளையும் எப்படி சமாளிப்பார்கள் ? என்று யோசிப்பதற்கு திமுகவின் தலைமைக்கு மாநில முதல்வருக்கோ நேரமில்லை . அவர்கள் பாஜகவின் கொடிக்கம்பங்களை அகற்றுவதிலும் அவர்களின் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் அதிகார துஷ்பிரயோகம் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் என்று அத்தனை பேரின் மீதும் அடக்குமுறை மறுபக்கம் இதையெல்லாம் பூசி மெழுகும் விதமாக ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி என்று சோர் விளம்பரம் செய்து அனைத்தையும் மறைத்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் இவர்களின் எஞ்சிய காலம் ஆட்சி முடிவதற்குள் நம்முடைய வாழ்க்கை தரம் பொருளாதார நிலை என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள்.


Share it if you like it