ஏலே மக்கா, 1000 கோடியா ! தலையே சுத்துது பா !

ஏலே மக்கா, 1000 கோடியா ! தலையே சுத்துது பா !

Share it if you like it

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றி உள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெகத்ரட்சகன் மகள் ஸ்ரீநிஷாவுக்கு சொந்தமான ஈக்காட்டுதாங்களில் உள்ள கெஸ்ட் ஹௌஸிலும் சோதனை நடத்தப்பட்டது. 49 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கடிகாரம் உட்பட 7 கைக்கடிகாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 45 லட்சம் என கூறப்படுகிறது.

மேலும் ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறன் 13 நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர் வருமான துறை அதிகாரிகள்.

இந்நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றபட்டுள்ளதாகவும், சுமார் 1000 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் ஒரு எம்பி வீட்டிலே 1000 கோடி என்றால் அனைத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீட்டிலும் சோதனை நடத்தினால் நம் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்துவிட்டு ஏழைகளே இல்லாத நாடாக மாற்றிவிடலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it