நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் ஒப்பந்தம் !

நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் ஒப்பந்தம் !

Share it if you like it

இரண்டு நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார்.

தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையத்தின் 7-வது கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து இருதரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேபாளத்தின் மறுசீரமைப்பு முயற்சிக்கு ரூ. 1,000 கோடி மானியமாக நேபாள-இந்தியா கூட்டுக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் இந்தியா நேற்று அறிவித்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ராம் சந்திர பௌடல் மற்றும் பிரசண்டா என்று அழைக்கப்படும் பிரதமர் புஷ்ப கமல் தஹால் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நேபாளம் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவிற்கு வழங்க ஒப்பந்தம் கையெத்தானது. அதேபோல், நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் சேவை ஒப்பந்தத்தை இரு தரப்பும் தொடங்கியுள்ளன. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், நேபாள மின்சார ஆணையம் மற்றும் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புக்கானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக காத்மாண்டு போஸ்ட் இதழுக்கு பேட்டி அளித்திருந்த என்.பி. சாத், “இந்தியா உடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 30-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம், நீர் வளம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it