12 ஆயிரம் வைணவர்கள் தங்கள் உயிரைத் துச்சம் என்று நினைத்துப் போராடி, கோவிலை காப்பாற்றினர் !

12 ஆயிரம் வைணவர்கள் தங்கள் உயிரைத் துச்சம் என்று நினைத்துப் போராடி, கோவிலை காப்பாற்றினர் !

Share it if you like it

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பின்வருமாறு பேசியுள்ளார் :-
பயணத்தின் 100வது தொகுதியாக, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான, பெரிய பெருமாள் குடி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் மண்ணில், பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்குவது ஸ்ரீரங்கம் தொகுதி. ஒரே தொகுதியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரும் அருள் பாலிக்கிறார்கள்.

சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்பதற்கு இங்கு வானுயர உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரமே சாட்சி. நம் ஸ்ரீரங்கம் கோவிலை அழிக்க பல முயற்சிகள் நடந்தன. 13 ஆம் நூற்றாண்டில், மாலிக் காபூர், உலுக் கான் உள்ளிட்ட முகலாய ஆட்சியாளர்கள், தமிழகக் கோவில்களைச் சூறையாடினர். ஸ்ரீரங்கம் கோவிலைக் காப்பாற்ற, 12 ஆயிரம் வைணவர்கள் தங்கள் உயிரைத் துச்சம் என்று நினைத்துப் போராடி, கோவிலைக் காப்பாற்றினர். சுவாமியை 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் வைத்தனர். அப்போது கூட சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. இப்போது உதயநிதி சனாதன தர்மத்தை அழித்து விடுவேன் என்கிறார்.


Share it if you like it