கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் – பிரதமர் மோடி !

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் – பிரதமர் மோடி !

Share it if you like it

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் கிராமப்புற மேம்பாடு, சாலை, மின்சாரம், பாசனம், குடிநீர், தோட்டக்கலை,கல்வி,சுகாதாரம், மற்றும் பேரிடர் மேலாண்மை, ஆகிய துறைகளில் சுமார் 4200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர், சமீபத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி செய்து முடிக்கப்பட்டது. இந்தியா வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுகிறது.

விளையாட்டுத் துறையிலும் இந்தியாவின் திறனை உலகம் இன்று வியந்து பார்க்கிறது. சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடந்த ஆண்டை விட அதிக பதக்கங்கள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் திறனை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது. இன்று நமது தேசியக் கொடி பார்க்கும் இடமெல்லாம் உயரமாக பறந்து கொண்டிருக்கிறது. உலகில் எந்த நாடும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் 3 தரையிறங்கியது. இன்று விண்வெளியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் இந்தியாவின் பலத்தை கண்டு உலகமே வியந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Share it if you like it