1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு !

1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு !

Share it if you like it

தமிழகத்தில் மார்ச் 31 தேதி வரை பறக்கும் படை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை (ஏப்ரல் 02) வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து அவர், ஏப்ரல் 4ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. cVIGIL செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it