கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பே மூன்று முறைக்கு மேல் பாராட்டியுள்ளது. வருகிற மே 22ம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக உள்ளார் என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவல் ஆகும்.
தற்போது 34 உறுப்பினர்களைக் கொண்ட WHO நிர்வாகக் குழுவின் தலைவரான ஜப்பானின் டாக்டர் ஹிரோகி நகதானிக்குப் பிறகு ஹர்ஷ் வர்தன் அப்பொறுப்பிற்கு வர உள்ளார். இந்தியாவின் வேட்பாளரை நிர்வாகக் குழுவில் நியமிக்கும் திட்டத்தில் 194 நாடுகள் கொண்ட உலக சுகாதார சபை கையெழுத்திட்டுள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பதையும், அதைத் தொடர்ந்து பெய்ஜிங்கின் நடவடிக்கை குறித்தும் விசாரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் வலியுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியா நிர்வாகக் குழுவின் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இந்தியன் who வின் தலைவர் ஆவதற்கு பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்