மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேவு பார்க்கும் செயற்கை கோளை பூமியில் இருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழித்து உலகின் வல்லமை கொண்ட 4வது நாடாக அண்மையில் இந்தியா பெருமை பெற்றிருந்தது.
2022 ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்ய உதவியுடன் இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாஸ்கோவில் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். கொரோனா காரணமாக பயிற்சி நிறுத்தபட்டிருந்தது.
காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில் இந்திய வீரர்கள் 4 பேரும் தற்பொழுது தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இந்திய தேசிய கொடியுடன் விண்வெளி உடையை அணிந்துள்ள வீரர்களின் புகைப்படத்தை அந்த அமைப்பு தற்பொழுது வெளியிட்டு இருப்பது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(பி.கு) இத்திட்டத்திற்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது.