மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆண்டாக 2024 அமையும் !

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆண்டாக 2024 அமையும் !

Share it if you like it

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகும் ஆண்டாக 2024-ஆம் ஆண்டு அமையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக் கோள் இந்தியாவின் முதலாவது எக்ஸ்ரே வகை செயற்கைக் கோளாகும். இது பூமியின் கருந்துளை பற்றிய ஆய்வுகளை நடத்தும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் கூறும்போது, “2024-ம் ஆண்டு இஸ்ரோ பல்வேறு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. குறிப்பாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும். தேவையான அனைத்து பரிசோதனைகளும் சரியாக அமையும் பட்சத்தில் 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் .

இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைகோளை செலுத்த உள்ளது. குறைந்தது மாதத்துக்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.மேலும், தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.


Share it if you like it