இந்தியர்களின் ஆயுள்காலம் 82 வயது… ஸ்வீட் எடு கொண்டாடு!

இந்தியர்களின் ஆயுள்காலம் 82 வயது… ஸ்வீட் எடு கொண்டாடு!

Share it if you like it

2100-ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 82 வயதாக இருக்கும் என்று ஐ.நா. கணித்திருக்கிறது.

1950-ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 35.21. தற்போது, 70.19 ஆக இருக்கிறது. இது 150 ஆண்டுகள் தொடரும்பட்சத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் 57 சதவீதம் அளவுக்கு மேம்படும். அதன்படி, 2100-ம் ஆண்டில் இந்தியர்களின் ஆயுட்காலம் 82 வயதாக அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கூறியிருக்கிறது. இதற்கு காரணம், சுத்தமான குடிநீர், நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள், சத்தான உணவுகள் மக்களை சென்றடைந்திருப்பதுதான். மேலும், மக்களும் உடற்பயிற்சி, புத்திசாலித்தமான வாழ்க்கையின் நன்மைகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது.

நோய்த்தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, பெரியம்மை, போலியோ போன்ற நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். உலகின் பல பகுதிகளில், தடுப்பூசிகள் நோய்களை ஒழித்ததுடன், கணிசமாக இறப்பு விகிதங்களைக் குறைக்கின்றன. அதேபோல, சராசரி ஆயுள்காலம் அதிகரிப்பதற்கு, தூய்மை மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளதும் காரணமாகும். அதாவது, மக்கள் முன்பை விட தற்போது தூய்மையான சூழலில் வாழ்கின்றனர். பாக்டீரியா போன்றவற்றின் தாக்கம் குறைந்தளவு பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இதனால், நோய், மரணம் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது.

குழந்தைகள் இறப்பு விகிதம் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த 2 காரணிகளும் ஆயுள்காலம் அதிகரிப்பதில் பங்கு வகித்தன. ஆயுள்காலம் அதிகரிப்பதற்கு, புதிதாக பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதை காரணமாகக் கூறலாம். இதை அப்படியே அமெரிக்காவுக்கு பொருத்திப் பார்த்தால் 23 சதவீதம் மேம்பட்டு இருக்கும். 1950-களில் அமெரிக்கர்களின் சராசரி ஆயுள்காலம் 68.33. தற்போது 79.05 சதவீதமாக இருக்கிறது. 2100-ல் சராசரி ஆயுட்காலம் 88.78 ஆக இருக்கும். சீனாவும் இந்தியாவை போன்றே சீரான முன்னேற்றத்தை காட்டுகிறது. 1950-ல் சீனர்களின் ஆயுட்காலம் 43.45. 2100-ல் ஏறக்குறைய 50.5 சதவீத வளர்ச்சி விகிதத்துடன், சராசரி ஆயுட்காலம் 87.82 ஆக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.


Share it if you like it