2,500 கோடியில் பூங்கா அமைக்கும் தமிழக அரசு விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமா?

2,500 கோடியில் பூங்கா அமைக்கும் தமிழக அரசு விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமா?

Share it if you like it

  • நீட் தேர்வு ரத்து
  • பெட்ரோல், டீசல், விலை குறைப்பு,
  • குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்
  • பூரண மதுவிலக்கு

என்று பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு,  நாட்கள் செல்ல, செல்ல, தனது சுயரூபத்தை தமிழக மக்களிடம் தற்பொது காட்ட துவங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தமிழகத்தின் பல்வேறு நெல்கொள்முதல் நிலையங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விடியல் ஆட்சியில் வீணாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க கோரி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நெல்லைக் கொட்டி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர்.

2,500 கோடியில் பூங்கா அமைக்கும் விடியல் அரசு தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it