இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி 25 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை சந்தித்த குல்தீப் சிங்..!

இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி 25 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை சந்தித்த குல்தீப் சிங்..!

Share it if you like it

29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை பெற்ற குல்தீப் சிங்.

தனது தோட்டத்தில் விவசாயம் பார்த்து கொண்டு இருந்த குல்தீப் சிங்கை, இந்திய உளவாளியாக இவர் இருக்க கூடும் என்று கருதி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது இந்த சம்பவம் நடந்தது 1992- ஆம் ஆண்டு. தொடர்ந்து 3 ஆண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் இவர் உள்ளாக்கப்பட்டார். இவருக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இவர் குற்றவாளி என்று கூறி 29 ஆண்டுகள் தண்டனை வழங்கி குல்தீப் சிங்கிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் அநீதி இழைத்தது.

குல்தீப்-பிற்கு ஊர்மிளா என்றொரு மனைவியும் அமீத் என்ற மகனும் உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த சித்திரவதையில் இதுவரை 10 அல்லது 12 இந்தியர்கள் அந்நாட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற கூடும் என்றும், எதிரி நாட்டிடம் சிக்கும் ஒவ்வொரு இந்தியரின் நிலைமையும் இது தான் என்று குல்தீப் சிங் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து உள்ளார்.

மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று அவர் உருக்கமுடன் கூறியுள்ளார். 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டிய குல்தீப் சிங். இந்திய அரசின் தீவிர முயற்சியினால் 4 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டு உள்ளார். எனக்கு 2-வது வாழ்க்கை கிடைக்க முயற்சி மேற்கொண்ட மத்திய அரசிற்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். இந்திய பாகிஸ்தான் எல்லையான ’வாக் எல்லை’ அருகே குல்தீப் சிங்கை பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it