சுதந்திரமடைந்ததும் சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த பாரத தேசத்தை இணைத்து ஒரே நாடாக கட்டி உருவாக்கி, இந்தியாவின் இரும்பு மனிதர் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். சர்தார் வல்லபாய் படேல் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே உள்ள ஆற்று தீவான சாதுபேட்டில் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இது உயரமானது.
2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த பொழுது இச்சிலை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அப்பொழுது செலவிடப்பட்டுள்ளது. 182 அடி உயர சர்தார் வல்லபாய் படேலின் சிலை நாட்டின் ஒற்றுமைக்கு அடையாளமாகவும், உலகின் மிக உயரமான சிலையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் சிலை குறித்து தி.மு.க மூத்த தலைவர் கனிமொழி அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர் வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்..
மோடி, குஜராத், பா.ஜ.க, என்றால் பொங்கும் கனிமொழி, அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த ஸ்டிக்கர் அரசிடம், இச்சமயத்தில் 2,500 கோடி ரூபாயில் பூங்கா எதற்கு? கொரோனா தொற்றில் இறந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் உடனே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டிக்கர் முதல்வரிடம் கனிமொழி கோரிக்கை வைப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018