சீன நாட்டை சேர்ந்த 4 பேர் ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி செய்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசாரும், ‘சைபர் கிரைம்’ போலீசாரும் இணைந்து புலன் விசாரணை நடத்தி வந்தனர்.இவர்கள் சட்டவிரோதமாக 1,600 சிம் கார்டுகள் வாங்கியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 500 சிம் கார்டுகள் பெறப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வந்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க உள்ளதாக கூறி, செல்போன் நிறுவனங்களிடம் சிம் கார்டுகளை வாங்கி ,சீன போலி செயலி பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக கொடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.