ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண் சட்டத்திற்காக மனு தாக்கல்…

ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண் சட்டத்திற்காக மனு தாக்கல்…

Share it if you like it

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

அதன் அம்சம் வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.புதிய வேளாண் சட்டங்களின் பயனாளியாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் உள்ளதாக விவசாயிகள் தவறாக புரிந்து கொண்டு எங்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

நாங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை வாங்குவதில்லை, அதுமட்டுமில்லாமல் எந்த விவசாயிகள் இடமும் இதுவரை எந்த ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

3 வேளாண் சட்டங்களால் நாங்கள் எந்த விதத்திலும் பயனடையப் போவதில்லை என்றும். தவறாக விவசாயிகளின் கோபம் எங்கள் மீது திரும்பியுள்ளது என்றும் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நாங்கள் பஞ்சாபிலோ, ஹரியானாவிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் விவசாய நிலங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கவில்லை, சம்மந்தமே இல்லாமல் வேளாண் சட்டங்களை எங்களுடன் இணைத்து பேசுவது எங்களுடைய வணிகங்களுக்கும், எங்களுடைய நற்பெயருக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.


Share it if you like it